அரசு வேலை வாய்ப்பில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தின் போது தமிழ் வளர்ச்சித்துறை, கனிம வளங்கள் துறை, தொழில் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாத நேரத்தின் போது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அரசு கருவூலத்தில் காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ளது. இதனால் வேலை அதிகமாக இருக்கிறது என கூறினார். அதன்பிறகு மாவட்ட சார் கருவூல அலுவலகத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதிய கணக்கும், 7 லட்சம் ஊழியர்களுக்கு கணக்கு வழக்கு பார்ப்பதற்காகவும், ஊழியர்களின் பற்றாக்குறையை அரசு நீக்க வேண்டும் என்றார். இதே நிலைமை தமிழகம் முழுவதும் உள்ள 243 அலுவலகங்களில் நீடிக்கிறது.
இதற்கு வருவாய்த்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் விளக்கமளித்தார். இவர் அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் தேர்வு நடத்துவதில் பல சிக்கல்கள் உள்ளது. மனித வள மேம்பாட்டுத்துறை மூலமாக அரசு வேலைக்கு ஊழியர்களை நியமிப்பது, சான்றிதழ்கள் சரி பார்ப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்பிறகு தமிழகத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் போது அவரை ஓராண்டிற்கு இடையில் பணி மாற்றம் செய்யக்கூடாது என்றார். இதனையடுத்து ஒரு அரசு ஊழியர் 3 வருடங்களுக்கு பின் ஒரு இடத்தில் நிரந்தரமாக பணியாற்றக் கூடாது.
இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஒருவர் பணி நிமித்தம் காரணமாக வேறு இடத்திற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டால் கட்டாயம் அதை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர் மீது உள்ள புகாரை அவரே விசாரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். இது போன்ற சட்டங்கள் தமிழகத்தில் அமல்படுத்தப்படவில்லை. இதில் உள்ள பிரச்சினைகளை மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம் குழு அமைத்து சீர்திருத்தம் செய்து வருகிறோம். எனவே விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.