Categories
உலக செய்திகள்

வழக்கமான போர் ஆயுதங்களை தான் பயன்படுத்துகிறோம்….!! ரஷ்ய வெளியுறவுத்துறை விளக்கம்…!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் இரண்டு மாதங்களை நெருங்கியுள்ள நிலையில் இந்தப் போரில் மற்றொரு புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதாவது டான்பாஸ் பகுதிகளில் உயர்துல்லிய ஏவுகணைகளை செலுத்தி 6 முக்கிய இடங்கள் மற்றும் 13 ராணுவ கிடங்குகளை அளித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது குறித்து உக்ரைனின் கருத்து என்னவென்றால் ரஷ்ய ராணுவம் கிழக்கு உக்ரைனில் உள்ள லூகான்ஸ்க் மற்றும் டானடஸ்க் பகுதிகளையும் முழுமையாக கைப்பற்றி கிரிமியாவிற்கு இடைப்பட்ட நிலப்பரப்பு இணைப்பை ஏற்படுத்த முயல்வதாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது. ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பின்வாங்கும் உக்ரைன் வீரர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மரியுபோல் வழியாக பாதைகளைத் திறந்து விடுவதாகவும் ரஷ்ய பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |