இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நெதர்லாந்தை சேர்ந்த 15 அதிகாரிகளும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 4 அதிகாரிகளும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதோடு பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மீதும் ரஷ்யா நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் ரஷ்யாவை சேர்ந்த அதிகாரிகளை பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் வெளியேற்றியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ரஷ்யா இவ்வாறு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.