தமிழகத்தில் தனியார் பள்ளிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 12,000 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாததால் தனியார் பள்ளிகள் வருமானம் இன்றி தவிக்கின்றது. தற்போது தொற்று குறைந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு கட்டண நிர்ணய ஆணையம் தனியார் பள்ளிகளில் குறைந்த அளவு கட்டணம் வசூலிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆணையின்படி எல்கேஜி மற்றும் யுகேஜி மாணவர்களுக்கு மாதம் 1,000 முதல் 2,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
அதன்பிறகு பிளஸ் 2 மாணவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் மிகக் குறைந்த அளவு இருப்பதாகவும், அதிக அளவு கட்டணங்களை நிர்ணயிக்கக்கோரி போராட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதும் 1 வாரம் பள்ளிகளை மூடி போராட்டம் நடத்த இருப்பதாகவும் தனியார் பள்ளி சங்கத்தின் நிர்வாகி நந்தகுமார் கூறியுள்ளார்.