சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தோற்று அதிகரித்து வருவதால் அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷாங்காய் நகரில் வசிக்கும் 2 கோடியே 60 லட்சம் பேர் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் தவித்து வருகின்றனர்.
கடும் சித்திரவதையால் அவதிப்பட்டு வரும் அவர்கள் கொடுமை தாங்க முடியாமல் வீட்டு பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வளர்ப்பு பிராணிகளை கைப்பற்றியுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அவற்றை கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்து மண்ணில் புதைப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.