தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகக் கடைகளும் மூடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மே 5 -ம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில் வணிகர் விடியல் என்ற தலைப்பில் மாபெரும் மாநாடு திருச்சியில் நடைபெற இருக்கிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வணிகர் சங்கத்தின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சார்பில் மாபெரும் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் வணிகர் சங்கத்தினரின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், வணிகர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகவும் கடைகள் அடைக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார்.