Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விதிகளை மீறி குப்பை கொட்டிவர்களிடம் ரூ 2.78 லட்சம் அபராதம் வசூல்…. மேயர் ஆர்.பிரியா தகவல்..!!

சென்னையில் விதிகளை மீறி பொதுவெளியில் குப்பை கொட்டிவர்களிடம் ரூ 2.78 லட்சம் வசூல் செய்யப்பட்டதாக மேயர் ஆர். பிரியா தகவல் அளித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ் குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் டாக்டர் எஸ். மனிஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் மேயர் ஆர். பிரியா அவர்கள் கூறியிருப்பதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சேரும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை மாநகராட்சியின் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்திற்கு அனுப்பப்பட்டு அதிலிருந்து இயற்கை உரம் தயாரித்து பொதுமக்களுக்கு விற்கப்படுகின்றது. அதில் கடந்த 4-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ரூ 15,534 கிலோ இயற்கை உரங்கள் விற்கப்பட்டு மாநகராட்சிக்கு 1,37,080 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

மேலும் உலர்க் கழிவுகளை வள மீட்பு மையங்கள், பொருள் மீட்பு மையங்களுக்கு கொண்டுசென்று மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது. அதில் கடந்த 4-ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை ரூ2,79,832 கிலோ உலர் கழிவுகள் விற்கப்பட்டு மாநகராட்சிக்கு ரூ 17,82,210 வருவாய் கிடைத்துள்ளது. அதேபோன்று பொதுவெளியில் விதியை மீறி குப்பைகளை கொட்டிய 478 பேர்களிடம் கடந்த 14 நாட்களில் ரூபாய் 2,78,800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டிட கழிவுகளை கொட்டிய 159 பேர்களிடம் ரூ 3,32,387 அபராதமும், சுவரொட்டிகள் ஒட்டிய 130 பேர்களிடம் ரூ53,100 அபராதமும், 49 பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்களிடம் இருந்து ரூ 1,27,000 அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |