கேள்வி நேரத்துடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நடைபெற்றுவரும் சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஊரக தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலை. கட்டடக்கலை, திட்டமிடல் பள்ளியில், இளநிலை திட்டமிடல் பாடத்திட்டம் அறிமுகம் செய்ய உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். இளநிலை திட்டமிடல் திட்டத்திற்காக ரூபாய் 10 கோடி நிதி வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.