கேள்வி நேரத்துடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நடைபெற்றுவரும் சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் ஊரக தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் பதில் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், நில உரிமையுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1 லட்சம் தனி வீடுகள் அமைத்துத்தரப்படும். நகர்புறங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைக்குடும்பங்களுக்கு 25,000 அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்தார்.