Categories
மாநில செய்திகள்

JUST IN: ஆண்டுதோறும் 500 ரேஷன் கடைகளுக்கு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நாள்தோறும் துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பல்வேறு புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, ஆற்காடு தொகுதி, புங்கனூர் ஊராட்சி, எல்லாசி குடிசை, வரதேசி நகர், விலாப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் பகுதிநேர நியாய விலைக்கடைகள் அமைப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும். மேலும் 6,300 முழு நேர நியாய விலை கடைகளுக்கும், 763 பகுதிநேர நியாய விலை கடை களுக்கும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதாகவும், நிரந்தர கட்டிடம் கட்டுவது தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நடப்பாண்டு முதல் ஆண்டுதோறும் 500 கடைகள் என்ற வீதத்தில் நிரந்தர கட்டடம் கட்டித் தரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |