பல்வேறு வங்கிகள் சமீபத்தில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை மாற்றி வருகின்றன. அதன்படி தற்போது ESAF ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஃபிக்சட் டெபாசிட் வட்டியைமாற்றியுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 18 முதல் அமலுக்கு வந்துள்ளன. பொது வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சமாக 4% வட்டியும், அதிகபட்சமாக 6.75% வட்டியும் வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களை விட சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி வழங்கப்படுகிறது.
புதிய வட்டி விகிதங்கள்:
7 – 14 நாட்கள் : 4%
15 – 59 நாட்கள் : 4.50%
60 – 90 நாட்கள் : 5%
91 – 182 நாட்கள் : 5.25%
183 நாட்கள் – 1 ஆண்டு : 5.50%
1 ஆண்டு 1 நாள் – 2 ஆண்டு : 6%
2 ஆண்டு – 3 ஆண்டு : 6.75%
3 ஆண்டு – 4 ஆண்டு : 5.75%
4 ஆண்டு – 5 ஆண்டு : 5.75%
5 ஆண்டு – 10 ஆண்டு : 5.25%