பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் வரையறுக்கப்பட்ட முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி, இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஈசாக்கு தலைமை தாங்கினார். இவர்கள் போராட்டம் நடத்தும் போது கையில் காலி தட்டுகளை வைத்திருந்தனர். மேலும் இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் லூக்காஸ், மாவட்ட நிர்வாகிகள் நிர்மலா பாய், கௌரி அம்மாள், சரோஜின், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.