தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கூட்டுறவு தணிக்கை துறையில் பதவி இயக்குனர் பணிக்கு ஏப்ரல் 30ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி சற்றுமுன் அறிவித்துள்ளது. www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையத்தளங்களில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அதனைப்போலவே ஜூன் 19-ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவி தேர்வுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories