ரஷ்ய நாட்டிற்கு சீனா தெரிவிக்கும் ஆதரவு தொடர்பில் உற்றுநோக்கி கவனிக்கவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளரான நெட் ப்ரைஸ், வாஷிங்டனில் பேசியதாவது, தற்போது வரை ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களையும் தளவாடங்களையும் சீனா அனுப்பியதாக எங்களுக்கு தகவல் வரவில்லை என்று கூறியிருக்கிறார்.
எனினும் ரஷ்யாவிற்கு சீனா தெரிவிக்கும் ஆதரவு தொடர்பில் அதிக கவனத்துடன் உற்று நோக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்து வருவதற்கு ஆதரவு தெரிவிப்பதா? என்பது தொடர்பில் சீனா சுயமாக முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.