காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் நடிகர் விஜய், அஜித், சூர்யா போன்ற பிரபல முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்த காஜல் அகர்வால் அவ்வப்பொது தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதனயடுத்து, நேற்று இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.