Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரியாணி திருவிழா..போட்டி போட்ட பக்தர்கள்..!!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே முனியாண்டி கோவிலில் நடைபெற்ற மெகா பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயிலில் 85வது ஆண்டு பிரியாணி  திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து , ஸ்ரீ முடியாண்டி விலாஸ்  ஓட்டல் நடத்திவரும் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதனை ஒட்டி  நடத்தப்பட்ட ஊர்வலங்களில் பெண்கள் தேங்காய், பழம், பூ தட்டுகளை  தலையில் சுமந்தபடி கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்தனர்.

விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி  சுவாமிக்கு பலியிடபட்டு கோயில் வளாகத்திலேயே பிரியாணி சமைக்கப்பட்டது. இதனை அடுத்து கோயில் வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த கிராம மக்களுக்கு அசைவ பிரியாணி விநியோகம் செய்யப்பட்டது.

இதனை பெற்றிட மக்கள் போட்டி போட்டு பிரியாணியை பெற முயன்றதால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது, தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி பிரியாணி விநியோகம் செய்ய உதவினர். பிரியாணி அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர் ,அகத்தப்பட்டி போன்ற உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த  ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு  பிரியாணி பிரசாத்தை பெற்றுக்கொண்டனர்.

Categories

Tech |