80 தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்து வருகிறது என ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கோட்டிற்கு அப்பால் தீவிரவாத பயிற்சி முகாம்கள் இயங்கி வருவதாகவும் இதில் 60 முதல் 80 தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பாலாகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் கடந்த 2019-ம் ஆண்டு நடத்திய துல்லிய தாக்குதலின் மூலம் அழித்ததுள்ளது. அதன்பின் எல்லையோரம் இருந்த தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் மூடி விட்டதாகவும் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சில வாரங்கள் மீண்டும் இயங்க தொடங்கியதாகவும் பின்னர் இந்த தீவிரவாத முகாம்கள் அகற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதனை அடுத்து ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கில் எல்லைக்கு அப்பால் தீவிரவாத முகாம்கள் மீண்டும் செயல்பட தொடங்கி இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை கூறியுள்ளது. அவர்கள் அனைவரும் ஆப்கானில் நடந்த போரில் பங்கேற்று திரும்பியவர்களாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை கூறியுள்ளது.