Categories
உலக செய்திகள்

ஜெர்மன்: பன்றியை கூட “புடின்” என சொல்லக்கூடாது…. பெயரை மாற்றிய பூங்கா…..!!!!!

ஜெர்மனியில் வனவிலங்கு பூங்காவில் உள்ள காட்டுபன்றியை கூட புடின் என்று அழைக்க சங்கடமாக உள்ளதாக பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பவேரியாவிலுள்ள விலங்கு பூங்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நினைவாக்க புடின் என்ற பெயரில் காட்டுப்பன்றி ஒன்று வளர்க்கப்படுகிறது. ஜெர்மனியில் பொதுவாகக் காணப்படும் காட்டுப் பன்றியை விட சுமார் 200 கிலோகிராம் (440 பவுண்டுகள்) எடையுள்ள தூய்மையான ரஷ்யப் பன்றி என்று கடந்த 3 வருடங்களுக்கு முன் பன்றிக்கு புடின் என பெயர் வைத்ததாக விலங்குப் பூங்காவின் ஆபரேட்டர் எக்கார்ட் மிக்கிஷ் தெரிவித்தார். ஆனால் ரஷ்யபடையெடுப்பை தொடர்ந்து உக்ரைனில் போர் வெடித்துள்ள சூழ்நிலையில், பவேரியாவில் உள்ள Mehlmeisel வனவிலங்கு பூங்கா சில வாரங்களாக அந்த பன்றிக்கு பெயர் மாற்றம் செய்ய முயற்சித்து வந்தது.

இந்நிலையில் சென்ற 19 ஆம் தேதி விலங்குகளுக்கான நடத்தப்பட்ட விழாவில் அந்த பன்றிக்கு புடின் என்ற பெயரை மாற்றி வேறு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஆக்ரோஷமான போரைத் தொடர்ந்து நூறாயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் ஜெர்மனிக்கு வந்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவருக்கும் Mehlmeisel வனவிலங்கு பூங்காவில் இலவச அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைனில் போர் வெடித்த பின் பன்றியின் பெயரை அழைப்பது சங்கடமானதாக இருந்ததாகவும், உக்ரைன் அகதிகள் மத்தியில் அழைக்க புடின் ஒரு மோசமான பெயராக இருப்பதாகவும் பூங்காவின் ஆபரேட்டர் எக்கார்ட் மிக்கிஷ் தெரிவித்தார்.

அதன்பின் காட்டுப் பன்றிக்கு புதுப்பெயர் சுட்ட ஆன்லைன் வாக்கெடுப்புக்கு நடத்தப்பட்டபோது, பிரபலமான உக்ரைனிய பெயர்களான ஜெலென்ஸ்கி, கிளிட்ச்கோ ஆகிய பெயர்களும், குத்துச்சண்டை சகோதரர்களான விட்டலி, விளாடிமிர் பெயர்களும் கூறப்பட்டது. இந்நிலையில் இறுதியில் தற்போதைய இக்கட்டான சூழ்நிலைக்கு அரசியலற்ற மாற்றாக “எபர்ஹோஃபர்” (Eberhofer) என்று பெயர் சூடப்பட்டது. 2,700 பரிந்துரைகளுக்குப் பின் பவேரியாவில் ரீட்டா பால்க் எழுதிய பிரபலமான புத்தகத்தொடரில் போலீஸ் அதிகாரியின் பெயரான எபர்ஹோஃபரை Mehlmeisel விலங்குப் பூங்கா தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |