டில்லியில் கோடை வெயில் கடுமையாக அதிகரித்து வருதனால் மின் தேவையும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் டில்லியில், 42.6 டிகிரி செல்ஷியசுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது, 72 ஆண்டுகளுக்குப் பின், ஏப்., மாத முற்பகுதியில் பதிவான அதிகபட்ச வெயில் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் டில்லியில் அதிகரித்து வரும் கோடை வெயில் காரணமாக டில்லியில் மின் தேவையும் அதிகரித்து வருகிறது. இதனால் டில்லியில் கடந்த ஏப்.,1 4,469 மெகா வாட் மின் தேவை இருந்த நிலையில் நேற்றைய மின்தேவை 5,735 மெகாவாட்டாக அதிரித்து வருகிறது.