Categories
உலக செய்திகள்

ரஷ்ய துருப்புக்களை கண்காணிக்க…. இதை பயன்படுத்திய உக்ரைன் நபர்…..!!!!!

திருடப்பட்ட ஆப்பிள் ஏர்போட்களில் ‘ஃபைண்ட் மை’ அம்சத்தைப் பயன்படுத்தி ரஷ்யதுருப்புக்களை உக்ரைனியர் ஒருவர் கண்காணித்த சம்பவம் தெரியவந்துள்ளது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர், தன் திருடப்பட்ட ஏர்போட்களைக் கண்டறிய ஆப்பிள் சாதன கண்காணிப்பு அம்சத்தைப் பயன்படுத்தி இருக்கிறார். அதே நேரம் ரஷ்ய துருப்புக்கள் உள்ள இடத்தையும் கண்காணித்து இருக்கிறார்.

ஏர்பட்ஸ் வாயிலாக ரஷ்யதுருப்புகள் சென்ற இடத்தை கண்டறிந்த செமனெட்ஸ்

டைம்ஸ் ஆஃப் லண்டனின் படி, விட்டலி செமனெட்ஸ் (Vitaliy Semenets) எனும் அந்த நபர் ரஷ்யாவின் படையெடுப்பின் தொடக்கத்தில் Hostomel-ல் உள்ள அவரது வீட்டில் இருந்து தன் புளூடூத் இயர்பட்ஸ் திருடப்பட்டதாகக் தெரிவித்தார். இதையடுத்து அவர் ஆப்பிள் தயாரிப்புகளிலுள்ள “Find My” அம்சத்தைப் பயன்படுத்தி திருடப்பட்ட இயர்பட்ஸ் எங்கே எடுத்துச் செல்லப்படுகிறது என்று பின்பற்றும் அதே நேரத்தில் ரஷ்ய துருப்புக்களின் பாதையை கண்டறியவும் அதனை பயன்படுத்தினார்.

செமனெட்ஸ் தன் திருடப்பட்ட ஏர்பட்ஸ் பெலாரஸ் எல்லையைத் தாண்டிய போது அதை கண்காணித்தார். அதன்பின் அது ரஷ்ய நகரமான பெல்கோரோட்டை (Belgorod) அடைந்தது. அங்கு இருந்து உக்ரைனிய நகரமான டான்பாஸ் (Donbas) மீதான தாக்குதலுக்கு அவர்கள் தயாரானது கன்டுபிடிக்கப்பட்டது. “தொழில் நுட்பத்திற்கு நன்றி, என் ஏர்பட்ஸ் இப்போது எங்கே என்று எனக்குத் தெரியும்” என்ற தலைப்புடன் உக்ரைனிய நபர் தன் தந்திரத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் செமனெட்ஸ்.

உக்ரைனில் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடிக்கும் ரஷ்ய வீரர்கள்:

இதனிடையில் டைம்ஸ் ஆஃப் லண்டனின் கூற்றுப்படி ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனிய வீடுகளிலிருந்து மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்ததாக பல்வேறு தகவல்கள் வந்துள்ளது. அதில் வல்லுநர்கள் ரஷ்யபடைகளின் ஒழுங்கின்மை மற்றும் ஒழுக்கமின்மையின் அடையாளம் என்று தெரிவித்துள்ளனர். பல்வேறு சிசிடிவி காட்சிகள், பெலாரஸிலுள்ள ஒரு தபால் நிலையத்தில் ரஷ்ய துருப்புக்கள் சலவை இயந்திரங்கள், மடிக்கணினிகள் மற்றும் இ-ஸ்கூட்டர்களை தங்கள் வீடுகளுக்கு அனுப்புவதற்காக எடுத்துச் செல்வதை காட்டுகிறது.

மொத்தத்தில் சுமார் 2 டன் பொருட்கள் 16 ரஷ்ய துருப்புக்களால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன் உக்ரைனின் பாதுகாப்பு சேவைகள் வெளியிட்ட இடைமறித்த அழைப்பின் அடிப்படையில் ஒரு ரஷ்ய சிப்பாய் தன் உறவினரிடம் இருந்து பெற்ற ஷாப்பிங் பட்டியலில், ஒரு மடிக்கணினி, ஸ்னீக்கர் காலணிகள் மற்றும் ஆடைகள் என இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் ஒரு ரஷ்ய சிப்பாய் தன் கெவ்லர் உடல் கவசத்திற்கு பதிலாக உக்ரைனிலிருந்து திருடப்பட்ட மேக்புக் லேப்டாப் கணினியை மாட்டிக் கொண்டிருந்த நிலையில் இர்பினில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Categories

Tech |