Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவர் 169” இயக்குனர் யார் தெரியுமா?….. ரஜினியின் ட்விட்டர் பதிவு….!!!!

நடிகர் ரஜினி நடிக்கும் அடுத்த திரைப்படத்தின்  இயக்குனர் குறித்த தகவல்கள் இணையதளத்தில் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். ஆனால் இந்தப் படம் ரிலீசாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் தலைவர் 169 திரைப்படத்தில் இயக்குனர் நெல்சன் இயக்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

ஆனால் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது தலைவர் 169 திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கப் போவதில்லை என்றும் இயக்குனர் அட்லி அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்கப்போவதாக இணையதளத்தில் தகவல்கள் பரவி வந்தது. தற்போது இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் ரஜினி தனது இணையதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் ரஜினியின் தலைவர் 169 திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கப் போவது தற்போது உறுதியாகியுள்ளது.

Categories

Tech |