Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்”… மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய எர்ணாவூர் நாராயணன்….!!!!

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் ஒன்பதாம் வருட நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்.

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் ஒன்பதாம் வருடம் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள திருவொற்றியூர் மாநகராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இதை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை சமத்துவ மக்கள் கட்சி கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் வழங்கினார். மேலும் அந்த ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மின்விசிறிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் தங்கமுத்து, ராஜேஷ், கிராம நல சங்க செயலாளர் சசிதரன், எர்ணாவூர் நாடார், செயலாளர் சுந்தரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

 

Categories

Tech |