செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி. இவர் காஷ்மீர் லடாக்கில் உள்ள 5500 அடி உயர மலை உச்சியில் தனி ஒரு பெண்ணாக ஏறி சாதனை படைத்துள்ளார். இதனால் இவர் அடுத்த மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தகுதி பெற்றுள்ளார். இதன் மூலம் முதல் முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏற போகும் முதல் தமிழ் பெண் என்ற தகுதியை முத்தமிழ் செல்வி பெற்றுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை வந்த முத்தமிழ் செல்விக்கு அவருடைய உறவினர்கள் விமான நிலையத்தில் கோலாகல வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த சாதனையை தடை செய்வதற்கு தமிழக அரசு எனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.