Categories
தேசிய செய்திகள்

அடடே! இப்படி செய்தால் எலுமிச்சை பழங்களின் விலை குறையுமாம்….. என்ன ஒரு நம்பிக்கை….!!!!

எலுமிச்சை பழங்களின் விலை குறைவதற்கான சிறப்பு பூஜை செய்யப்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள வாரணாசியில் புகழ்பெற்ற மா ஆதி சக்தி கோவில் அமைந்துள்ளது. இங்கு எலுமிச்சை பழத்தின் உயர்வை கட்டுப்படுத்துவதற்காக சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

இந்த கோவிலில் உள்ள அம்மனை சாந்தப்படுத்துவதற்காக 11 எலுமிச்சம் பழங்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையை ஹரிஷ் மிஸ்ரா என்பவர் ஏற்பாடு செய்துள்ளார். இவர் தமது விருப்பங்களை நிறைவேற்றும் சக்தி இந்த பூஜைக்கு உண்டு எனவும், இந்த பூஜை மக்களின் நலனுக்காக செய்யப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |