Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிளை திருடி விற்க முயன்ற போலீஸ்காரர் கைது”… போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு…!!!

சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் உள்ள மோட்டார் சைக்கிளை திருடி விற்க முயன்ற போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸ் நிலையத்தில் ரோந்து பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார் ஜெயசந்திரன். போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் இவர் போதை பழக்கம் உள்ளவர். சென்ற பிப்ரவரி மாதம் இவரின் மனைவி தீக்குளித்து இறந்தார். அவரை தற்கொலை செய்வதற்கு ஜெயச்சந்திரன் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் வருமானத்துக்கு கஷ்டப்பட்டு வந்த நிலையில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் உள்ள திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடி தனது நண்பர்களான நாகராஜ், அருண் பிரகாஷ் மூலம் கபிலன் என்பவரிடம் விற்க முயற்சி செய்துள்ளார். கபிலன் என்பவர் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஒன்றை வைத்துள்ளார். ஜெயச்சந்திரன் விற்க முயன்ற மோட்டார் சைக்கிளின் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தின் பெயர் இருந்ததால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டு ஜெயச்சந்திரனிடம் கேட்டபோது நான் போலீஸ்காரன்.

என் மேலயே சந்தேகப்படுகிறாயா என மிரட்டியுள்ளார். இதனால் கபிலன் மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் ஜெயச்சந்திரன் விற்க முயன்ற மோட்டார் சைக்கிளானது மயிலாப்பூர் காவல் நிலையத்திலிருந்து திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து ஜெயச்சந்திரன் மற்றும் அவரின் இரண்டு நண்பர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்துள்ளார்கள்.

Categories

Tech |