பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு உறவுக்கார பெண்களையே ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட பட்டதாரி இளைஞனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதுடைய கிருஷ்ணா. இவர் பிகாம் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியில் உள்ளார். இந்த நிலையில் அவரின் உறவுக்காரப் பெண்மணிகளான 55 வயது, 40 வயது மற்றும் 27 வயதுள்ளவர்கள் இவர் மீது ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்கள்.
அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, நாங்கள் வீட்டில் துணி துவைக்கும் போது லேசாக ஆடை விலகி இருக்கும் நிலையில் எங்களுக்கு தெரியாமல் கிருஷ்ணா வீடியோ எடுத்து பணம் சம்பாதிப்பதற்காக இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் கிருஷ்ணா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் புகார் கொடுத்துள்ளார்கள். இதைத்தொடர்ந்து கிருஷ்ணாவிடம் ஓட்டேரி போலீசார்கள் விசாரணை செய்து வருகின்றனர்.