சத்தியமங்கலம் பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சலை தடுக்க மருத்துவ முகாம் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புளியங்கோம்பை பகுதியில் வசித்து வரும் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தி ஆவதால் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், நகராட்சி பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொள்ள வரவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதாரத் துறை சார்பாக சிறப்பு முகாம் ஒன்றை அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.