Categories
தேசிய செய்திகள்

100 ரூபாய்க்காக தகராறு…. அண்ணனை கொலை செய்த தம்பி…. பரபரப்பு சம்பவம்….!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் 100 ரூபாய்க்கு தகராறு செய்து அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், பாய்ரிஹா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபுதயா பால். இவரது தம்பி தீன்தயால். இவர் சம்பவ தினத்தன்று தனது அண்ணனிடம் 100 ரூபாய் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு உனக்கு எல்லாம் பணம் கொடுக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீன்தயால் அண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் சண்டை அதிகரிக்க ஆவேசமடைந்த தம்பி அண்ணனை கீழே தள்ளி கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் பிரபுதயா உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அண்ணனை கொலை செய்த தம்பியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Categories

Tech |