Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஒப்பந்த செவிலியர்கள் பணி நீடிப்பு செய்ய கோரிக்கை”… கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம்…!!!

தற்காலிக செவிலியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக அமர்ந்து பணி நீடிப்பு செய்யக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் கொரோனா காலகட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு பணி ஒப்பந்த காலம் முடிவடைந்ததால் பணியில் இருந்து விலகுமாறு கூறப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளார்கள். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் செவிலியர்கள் நேற்று கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க கோரியும் பணி நீட்டிப்பு செய்யக்கோரியும் கோரிக்கை விடுத்தார்கள். இதைத்தொடர்ந்து ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதாரத் துறை அலுவலகத்துக்குச் சென்று முற்றுகையிட்டார்கள்.

Categories

Tech |