Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பிரசித்திபெற்ற கோவில் உண்டியல் திறப்பு…. 8 1/2 லட்சத்தை தாண்டிய காணிக்கை…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!

பாகம் பிரியாள் சமேத வால்மீகிநாத சாமி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் 8 1/2 லட்சம் இருந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள திருவெற்றியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பாகம் பிரியாள் சமேத வால்மீகிநாத சாமி கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவில் உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றுள்ளது.

மேலும் காணிக்கை எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையால் சிவலிங்கம் தலைமையில் நடந்தது. அதன்படி 9 பிராத்தனை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் 8 லட்சத்து 56 ஆயிரத்து 320 ரூபாய் பணம் மற்றும் 68.600 கிராம் தங்கம் இருந்துள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |