Categories
உலக செய்திகள்

உக்ரைனில் மற்றோரு பெரிய இழப்பு…. இந்த போர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்குமோ…? வெளியான பரபரப்பு தகவல்….!!!

கேப்டன் அலெக்சாண்டர் சிர்வா (Alexander Chirva) உக்ரைனிய போரில் ஏற்பட்ட காயங்களால் உயிர் துறந்தார்.

சீசர் குனிகோவ் (Caesar Kunikov) என்ற பெரிய தரையிறங்கும் கப்பலின் கேப்டன் அலெக்சாண்டர் சிர்வா (Alexander Chirva) உக்ரைனிய போரில் ஏற்பட்ட காயங்களால் உயிர் துறந்தார் என்று Sevastopol கவர்னர் மிகைல் ரஸ்வோஜாயேவ் கூறினார். இதனை தொடர்ந்து கேப்டன் சிர்வா மரணத்தின் பின்னணியை கூறுகையில் “அவரது தைரியம், தொழில்முறை மற்றும் அனுபவம் குழு உறுப்பினர்களின் உயிரைக் காப்பாற்றியது” என்று தெரிவித்தார்.

அவர் தந்தை ஒரு கருங்கடல் கடற்படை தளபதி, மற்றும் அவரது சகோதரர் ரஷ்யாவின் தரைப்படையில் லெப்டினன்ட்-கர்னல் ஆவார். 3வது ரேங்க் கேப்டனான சிர்வா, செவாஸ்டோபோலில் பிறந்தார், ரேடியோ எலக்ட்ரானிக்ஸ் கடற்படை நிறுவனத்தில் பட்டம் பெற்றார். 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில், அவர் சிரியாவில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |