இன்றைய தின நிகழ்வுகள்
900 – லகுனா செப்பேடு (பிலிப்பீன்சின் ஆரம்பகால ஆவணம்): நம்வாரன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் கொடுக்கவேண்டிய கடனிலிருந்து விடுவிக்க, அமைச்சர் ஜெயதேவாவின் பிரதிநிதியாக தொண்டோ இராச்சியத்தின் முதன்மைத் தளபதி கட்டளை வெளியிட்டான்.
1506 – மூன்று நாள் லிஸ்பன் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. 1,900 யூதர்கள் போர்த்துக்கீசக் கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
1509 – ஏழாம் என்றியின் இறப்புக்குப் பின்னர் அவரது மகன் எட்டாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார்.
1526 – பானிப்பட் முதலாவது போர்: தில்லியின் கடைசி லௌதி சுல்தான் இப்ராகிம் லோடிக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் நடந்த போரில் இப்ராகிம் கொல்லப்பட்டார். பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினார்.
1782 – இரத்தினகோசின் நகரம் (இன்றைய பேங்காக்) முதலாம் இராமா மன்னரால் அமைக்கப்பட்டது.
1792 – பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய திராடென்டசு தூக்கிலிடப்பட்டார்.
1802 – அப்துல்-அசீசு பின் முகம்மது தலைமையிலான 12,000 வகாபிகள் கர்பலா என்ற இன்றைய ஈராக்கிய நகரை முற்றுகையிட்டு, அங்கிருந்த 3,000 மக்களைக் கொன்று நகரைச் சூரையாடினர்.
1821 – பென்டெர்லி அலி பாசா உதுமானியப் பேரரசின் பிரதமராகப் பதவியேற்று கான்ஸ்டண்டினோபில் நகரை அடைந்தார். இவர் ஒன்பது நாட்கள் மட்டுமே இப்பதவியில் நீடித்தார், பின்னர் இவர் நாடு கடத்தப்பட்டார்.
1856 – ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் எட்டு-மணி நேர வேலையைக் கோரி கட்டடத் தொழிலாளிகள் நாடாளுமன்றத்திற்கு ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றார்கள்.
1898 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கக் கடற்படை கியூபாவின் துறைமுகங்கள் மீது முற்றுகையிட்டது. அமெரிக்க சட்டமன்றம் ஏப்ரல் 25 இல் போர்ப் பிரகடனம் அறிவித்திருந்தாலும், போர் நிலை இந்நாளில் இருந்தே ஆரம்பித்தது.
1926 – நான்கு சியா இமாம்களின் கல்லறைகள் அடங்கிய அல்-பாக்கி இடுகாடு (இன்றைய சவூதி அரேபியாவில்) வகாபுகளினால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
1944 – பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் சோவியத் படைகள் ஜெர்மனியின் உயர் தலைமைப்பீடத்தைத் தாக்கினர்.
1960 – பிரசிலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது.
1964 – டிரான்சிட்-5பிஎன் என்ற செயற்கைக்கோள் சுற்றுவட்டத்தில் இணைய முடியாமல் வளி மண்டலத்தினுள் மீளத் திரும்பியது. 0.95கிகி கதிரியக்க புளுட்டோனியம் பரவலாக சிதறியது.
1966 – ராஸ்தஃபாரை: எத்தியோப்பியாவின் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி ஜமேக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
1967 – கிரேக்கத்தில் பொதுத்தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில் இராணுவத் தளபதி ஜோர்ஜியோசு பப்படபவுலோசு இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த ஏழாண்டுகளுக்கு பதவியில் இருந்தார்.
1975 – வியட்நாம் போர்: தென் வியட்நாம் அரசுத் தலைவர் நியூவென் வான் தியூ சாய்கோனை விட்டு வெளியேறினார்.
1987 – இலங்கையின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – 1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்: பெய்ஜிங் நகரில் தியனன்மென் சதுக்கத்தில் கிட்டத்தட்ட 100,000 மாணவர்கள் சீர்திருத்தத் தலைவர் ஹீ யாபாங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டனர்.
1993 – பொலிவியாவில் முன்னாள் அரசுத்தலைவர் லூயிசு கார்சியா மேசா என்பவருக்கு கொலை, ஊழல், அரசமைப்பு மீறல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
2004 – ஈரானில் பசுரா நகரில் ஐந்து தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 74 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் காயமடைந்தனர்.
2012 – நெதர்லாந்தில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 116 பேர் காயமடைந்தனர்.
2019 – இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்: கொழும்பு உட்படப் பல இடங்களில் உயிர்ப்பு ஞாயிறு நாளன்று மூன்று கிறித்தவத் தேவாலயங்கள், நான்கு உணவகங்களில் இசுலாமிய அரசு ஆதரவில் தேசிய தவ்கீத் ஜமாத் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் 268 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1864 – மக்ஸ் வெபர், செருமானிய பொருளியலாளர், சமூகவியலாளர் (இ. 1920)
1917 – வசுமதி இராமசாமி, தமிழக எழுத்தாளர் (இ. 2004)
1925 – வாண்டுமாமா, தமிழக எழுத்தாளர் (இ. 2014)
1925 – கண்டதேவி எஸ். அழகிரிசாமி, தமிழக வயலின் இசைக்கலைஞர் (இ. 2000)
1926 – இரண்டாம் எலிசபெத், ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி
1937 – ஆற்காடு வீராசாமி, தமிழக அரசியல்வாதி
1945 – சீனிவாசராகவன் வெங்கடராகவன், இந்தியத் துடுப்பாளர்
1956 – மங்கள சமரவீர, இலங்கை அரசியல்வாதி
இன்றைய தின இறப்புகள்
1142 – பியேர் அபேலார்டு, பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1079)
1526 – இப்ராகிம் லோடி, தில்லி சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளர்
1910 – மார்க் டுவெய்ன், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1835)
1938 – முகமது இக்பால், இந்திய-பாக்கித்தானிய மெய்யியலாளர், கவிஞர் (பி. 1877)
1946 – ஜான் மேனார்ட் கெயின்ஸ், ஆங்கிலேயப் பொருளியலாளர், மெய்யியலாளர் (பி. 1883)
1952 – ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், பிரித்தானிய அரசியல்வாதி (பி. 1889)
1964 – பாரதிதாசன், புரட்சிக் கவிஞர், பாவேந்தர் (பி. 1891)
1978 – டி. ஆர். மகாலிங்கம், தென்னிந்தியத் திரைப்பட, நாடக நடிகர், பாடகர் (பி. 1923)
2006 – முல்லையூரான், ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1955)
2013 – சகுந்தலா தேவி, இந்தியக் கணிதவியலாளர் (பி. 1929)
இன்றைய தின சிறப்பு நாள்
தேசிய மர நடுகை நாள் (கென்யா)
தேசிய குடிமை பணிகள் தினம் (இந்தியா)