Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“திடீர் ஆய்வு” உணவருந்திய கலெக்டர்…. மகிழ்ச்சியில் பழங்குடியின மாணவர்கள்….!!!!

அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே கார்க்குடி பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அம்ரீத் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.  அந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மாணவ மாணவிகளுடன் உரையாடி கல்வியில் கவனம் செலுத்தி நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுரை கூறினார்.

அதன்பின் பள்ளியின் வகுப்பறை, ஆய்வகம், கணினி அறை, சமையல் அறை போன்றவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடம் ‌அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறதா என கேட்டார். இதற்கு மாணவர்கள் அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறது என கூறினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இதனால் பழங்குடியின மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

Categories

Tech |