Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்” ஓய்வூதியர்கள் சங்கத்தினர்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் சங்கத்தினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வட்டச்செயலாளர் தயாளன் தலைமை தாங்கினார். இவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் வேண்டும்.

அதன்பிறகு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் சிகிச்சை பெற வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட பொறுப்பாளர் மகேஷ், அரசு ஓய்வூதியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கருணாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை கோஷங்களக எழுப்பினர்.

Categories

Tech |