Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புகழ் பெற்ற மாரியம்மன் திருக்கோவில்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. வடம் பிடித்து இழுத்த கலெக்டர்….!!!

புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் புகழ் பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் தேர்த்திருவிழா கடந்த மாதம் 18-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மறுநாள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அங்காளம்மன், ஹெத்தையம்மன், பட்டத்தரசி அம்மன், ராஜகாளியம்மன், பவானி அம்மன், மாளிகைபுரத்து அம்மன், கருமாரி அம்மன், காமாட்சி அம்மன், துர்க்கை அம்மன், ஆதிபராசக்தி போன்ற தெய்வங்களின் வீதிஉலா நடைபெற்றது.

அதன்பிறகு கடந்த 18-ஆம் தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேர் கலசம் பொருத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் கலந்து கொண்டு முதலில் தேரை வடம் பிடித்து இழுத்தார். அதன்பிறகு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க முக்கிய வீதிகளின் வழியாக தேர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |