புகழ்பெற்ற கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகுதியில் புகழ்பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மாசித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கோவிலில் இருக்கும் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமை தாங்கினார்.
இந்த உண்டியல் எண்ணும் பணியில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் பலர் ஈடுபட்டிருந்தனர். இதில் மொத்தம் 18,83,946 ரூபாய் கிடைத்துள்ளது. அதன்பிறகு 85.500 கிராம் தங்கம், 228 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வெளிநாட்டு பணங்களும் கிடைத்துள்ளது. மேலும் இது 41 நாட்களுக்கான உண்டியல் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.