Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இளைஞர்களுக்கான சூப்பர் அறிவிப்பு…. ஏப்ரல் 24 ஆம் தேதி…மிஸ் பண்ணிடாதீங்க….!!!

சென்னையில் வருகிற  ஏப்ரல் 24 ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பு துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் தொழில்நெறி காட்டுதல் மையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எந்த மாவட்டத்திலும் நடத்தப்படாத நிலையில், பல இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். மேலும் கொரோனா காலகட்டத்தில் தனியார் நிறுவனங்களுமே எந்த வேலைவாய்ப்பையும் புதிதாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இளைஞர்களின் நலனுக்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் வேலைவாய்ப்பு முகாமானது  நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து, வருகிற வெள்ளிக்கிழமை அன்று வேலைவாய்ப்பு முகாமினை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமா, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதோ ஒரு பட்டப்படிப்பு படித்திருந்தாலே  கலந்து கொள்ளலாம். மேலும் இம்முகாமில் கலந்து கொள்பவரின் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து இந்த வேலைவாய்ப்பு முகாமானது சென்னை – 32, கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள இருகின்றனர். ஆகவே விருப்பம் உள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |