தொழில்துறை முதலீட்டில் தமிழக மிக வேகமாக முன்னேறி வருகின்றது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கான முதலீடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், தொழில்துறை முதலீட்டில் தமிழக மிக வேகமாக முன்னேறி வருகின்றது. கடந்த 10 மாதங்களில் புதிய முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் வந்துள்ளன. தமிழகம் முழுவதும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தொழில்துறைக்கு ஆளுங்கட்சி மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்க வேண்டும். இதுவரை 69 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு ஈர்க்க பட்டுள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீடு தேசிய அளவில் 16 சதவீதம் குறைந்து உள்ள இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் 41.5 சதவீதம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.