Categories
உலகசெய்திகள்

பொருளாதாரத் தடைகள் நீடித்தால் “இது கட்டாயமாக பாதிக்கும்”…. தகவல் வெளியிட்ட செயலாளர்….!!

ரஷ்யா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மேலும் பொருளாதார தடைகளை விதித்தால் அவை எரிசக்தி வளங்களை பாதிக்கும் என்று பிரான்ஸ் வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் மீது அதீத பலம் கொண்ட ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்துள்ளது. இதற்கு பலநாடுகள் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். மேலும் ரஷ்யாவின் மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து முக்கிய ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் விவாதித்துள்ளதாக பிரான்ஸ் வெளியுறவுத்துறை செயலாளர் பியுன் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகள் பலப்படுத்தப்பட்டால் அது எரிசக்தி வளங்களை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |