தமிழில் வெண்ணிலா கபடிக்குழு நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரனுக்கு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன். அதை தொடர்ந்து அவர் இயக்கிய பாண்டியநாடு, மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தன. கடைசியாக சுசீந்திரன் சாம்பியன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தநிலையில் இயக்குனர் சுசீந்தரன் விபத்தில் காயமடைந்துள்ளார். நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனம் அவர் மீது திடீரென மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் சுசீந்திரனின் இடது கை மற்றும் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தற்போது பாதிக்கப்பட்ட இடத்தில் லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் 3 வாரங்கள் இங்கு ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் சுசீந்திரனிடம் கூறியுள்ளனர். காயமடைந்த சுசீந்திரனை திரையுலகினர் நேரில் சந்தித்துநலம் விசாரித்து வருகின்றனர்.