அறக்கட்டளை, மதம் சார்ந்த அறக்கட்டளைகள், வக்பு வாரியங்கள் போன்றவற்றிக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க கோரி பா.ஜ.க.வை சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய் டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) விபின் சங்கி தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது.
இந்நிலையில் மனுவை பரிசீலித்த ஐகோர்ட்டு, மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை, இந்திய சட்ட ஆணையம், மத்திய வக்பு வாரியம் ஆகியவை 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 28-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.