Categories
தேசிய செய்திகள்

ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த பள்ளி மாணவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத்தில் உள்ள மோடி நகரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி பேருந்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். அப்போது ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த அந்த மாணவன் ஜன்னலின் வெளியே எட்டி பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பம் ஒன்று சிறுவனின் தலையில் பயங்கரமாக மோதியது. அதனால் பலத்த காயமடைந்த சிறுவன் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் பள்ளி பேருந்தை பறிமுதல் செய்த போலீஸ் அதிகாரிகள் ஓட்டுனர் மற்றும் உதவியாளரை கைது செய்தனர். மாணவனின் இழப்புக்கு பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என்ற குழந்தையின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த இருவர் மற்றும் பேருந்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |