தண்டவாளத்தில் நின்று செல்பி எடுப்பதற்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் படியில் பயணம் செய்து 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் தண்டவாளத்தில் செல்பி எடுப்பதால் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அரசு பல்வேறு அறிவுரைகளை கூறினாலும் செல்ஃபி மோகத்தால் உயிரிழப்புகள் தினம் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் படிக்கட்டில் நின்று பயணம் செய்வோருக்கு மூன்று மாத ஜெயில் தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Categories