Categories
தேசிய செய்திகள்

“இது தேச நலனுக்குத் தீங்கு விளைவிக்கும்”…. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்…..!!!!!

ரூபாய் மதிப்பானது வீழ்ச்சி அடைவது ஏற்றுமதியை ஊக்குவிக்கும் என கூறப்படுவதை மறுத்துவிட்ட மத்திய வா்த்தக, தொழில்துறை அமைச்சா் பியூஷ்கோயல், மாறாக அது தேச நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று கூறினார். அதுமட்டுமல்லாமல் ஏற்றுமதியை கணிசமாக விரிவுபடுத்தி அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிக்க முதலீடுகளை ஊக்குவிப்பது அவசியம் எனவும் அவா் வலியுறுத்தினாா். தில்லியில் நடந்த 15வது சிவில் சா்வீசஸ் தினத்தில் கலந்துகொண்டு அவா் பேசியதாவது “ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தால் தான் ஏற்றுமதிசந்தையில் திறமையான போட்டியை ஏற்படுத்த இயலும் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஆனால் என் அனுபவத்தில் இருந்து சொல்வதென்றால், நம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதாலோ அல்லது பலவீனப்படுவதன் வாயிலாகவோ தேச நலனுக்கு தீங்குதான் ஏற்படும்.

இதனிடையில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, ஏற்றுமதி செலவை அதிகரிப்பதோடு நாட்டில் பண வீக்கத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி வட்டி விகிதத்தை உயா்த்தி மூலப்பொருள்களுக்கு பெரும்பாலும் இறக்குமதியைச் சாா்ந்துள்ள இந்திய பொருள்களுக்கு சந்தையில் போதிய விலை கிடைக்காத நிலையை ஏற்படுத்திவிடும். அதன்பின் வளமானஏற்றுமதி மற்றும் முதலீடு அந்நியச் செலாவணி இருப்பை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது. மதிப்பு மிகுந்த அந்நியச் செலாவணியை சம்பாதிக்கவும், ரூபாய் மதிப்பை நிலையாக வைத்து இருக்கவும் ஏற்றுமதி உதவுகிறது. சென்ற ஏப்ரல் 1-14-ஆம் தேதி வரை நாட்டின் ஏற்றுமதி 18.5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் மருந்துப் பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதியாகிறது. வரும் வருடங்களில் அவற்றின் ஏற்றுமதி 200 பில்லியன் டாலராக அதிகரிக்கும். தடையற்ற வணிக ஒப்பந்தங்கள் மூலம் சம்பந்தப்பட்ட இருநாடுகளும் பயன் பெறுகின்றன” என்று அவர் தெரிவித்தார். முன்பாக வா்த்தகத்துறைச் செயலா் பி.வி.ஆா். சுப்ரமணியம் பேசியதாவது, வரும் வருடங்களில் இந்திய பொருளாதாரத்தை 30- 40 டிரில்லியன் டாலராக அதிகரிக்க தொழில் நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். அத்துடன் பழைய சட்டங்களை திருத்தி அமைக்க வேண்டும் என்று கூறினார்.

Categories

Tech |