ரேஷன் அரிசி கடத்திய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வீயன்னூர் அருகே வட்டவிளை வீடு பகுதியில் விபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காவல்துறையில் 3 வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் டி.ஜி.பி ஆபாஷ்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் விபினை கைது செய்ய முடிவு செய்தார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் டி.ஜி.பி பரிந்துரை செய்தார். உடனே மாவட்ட ஆட்சியர் விபினை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜி விபினை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.