கருப்பசாமி கோவிலுக்கு சொந்தமான காளை திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊர்குளத்தான்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கருப்பசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்கள் சார்பில் மஞ்சு விரட்டு காளை ஒன்று வாங்கப்பட்டது . இந்த காளை சிராவயல், அரளிப்பாறை, கண்டிப்பட்டி, நெடு மறம், தேவபட்டு, மகிபாலன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காளை உயிரிழந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் காளையை மலர்களை கொண்டு அலங்கரித்து கிராமத்தின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு காளைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.