மாற்றுத்திறனாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருப்புகோடு பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான ஜெயக்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சில நாட்களாக யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மண்ணெண்ணெய் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜெயக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு ஜெயக்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் இரணியல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.