Categories
கிரிக்கெட் விளையாட்டு

மும்பையுடன் இன்று மோதல்….. சென்னை சூப்பர் கிங்சுக்கு 2-வது வெற்றி கிடைக்குமா?…!!!!

மும்பையுடன் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத உள்ளது. இந்த போட்டியில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அதேபோல் மும்பை அணியும் 6 ஆட்டங்களில் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு மும்பையில் டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்து 2-வது வெற்றியை பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஆட்டங்களிலும் தோற்று உள்ளதால் இந்த சீசனில் முதல் வெற்றிக்காக காத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் சென்னையை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். இரு அணிகளும் 32 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 13 முறையும், மும்பை இந்தியன்ஸ் 19 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |