Categories
உலக செய்திகள்

இதற்குத் தீர்வே இல்லையா….? காலவரையற்ற ஊரடங்கு…. பிரபல நாட்டில் நீடிக்கும் பதற்றம்….!!

ரம்புக்கனாவில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இலங்கை நாட்டில் உள்ள மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனால் இலங்கை அதிபரான கோத்தபய பதவி விலக கோரி நாளுக்கு நாள் போராட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரே மாதத்தில் இரு முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதால் கொந்தளித்த மக்கள் ரம்புக்கனா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை கலைக்க முயன்ற போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து கற்களை வீசி தாக்குதல் நடத்திய பொது மக்களை தடியடி கொடுத்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் போலீசார் அங்கிருந்து விரட்டியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 30 பேருக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனால் இலங்கையில் காலவரையற்ற பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டும் போலீசார், ராணுவம் கண்காணித்து வருகின்றனர். இதனால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது. இதனை அடுத்து பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் குறைந்தபட்சமாக ரூபாய் 27 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 90 நாட்களுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்படும் என்று புதிதாக பதவியேற்ற சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பாக இலங்கையில் 74 சதவீதம் பணவீக்கம் உயர்ந்துள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |