Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு – ஹன்சிகா நடிக்கும் ”மஹா” திரைப்படம்…. ரிலீஸ் தேதி அறிவிப்பு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

‘மஹா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. தற்போது இவர் நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற திரைப்படங்கள் உருவாகியுள்ளன. மேலும், இயக்குனர் கோகுல் இயக்கத்தில் ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

சிம்பு, ஹன்சிகா படத்துக்கு தேதி குறிச்சாச்சு! Simbu and Hansika's Maha to  be released on April 28 – News18 Tamil

இதனையடுத்து, இயக்குனர் ஜமில் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மஹா”. இந்த படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், ‘மஹா’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, வருகிற மே 27ம் தேதி இந்த திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

https://twitter.com/studio9_suresh/status/1517011768643850240

Categories

Tech |